Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்த நரேந்திர மோடி.. இந்திரா காந்தி சாதனையை முறியடித்து புதிய மைல்கல்

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்றுடன் (ஜூலை 25) 4,078 நாட்கள் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து, ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இந்திய வரலாற்றில் தொடர்ச்சியாகப் பிரதமர் பதவி வகித்தவர்களில், நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு, மோடி இரண்டாவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி முதல் 1964ம் ஆண்டு மே 27ம் தேதி வரை பிரதமராக இருந்தவர். ஜவஹர்லால் நேரு 16 ஆண்டுகள், 286 நாட்கள் இடைவெளி இல்லாமல் மிக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். .

இந்த நிலையில் 74 வயதான நரேந்திர மோடி 2014ம் ஆண்டு மே 26ம் தேதி பிரதமராக பதவியேற்றார். ஜூலை 25, 2025 நிலவரப்படி, மோடி தொடர்ந்து 4,078 நாட்கள் பதவியில் இருக்கிறார். இதன் மூலம், 24 ஜனவரி 1966 முதல் 24 மார்ச் 1977 வரை இந்திரா காந்தியின் 4,077 நாள் பதவிக்காலத்தை முறியடித்துள்ளார். இந்திராவுக்கு பிறகு, பெரும்பான்மையுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி 2002, 2007, 2012ல் குஜராத் தேர்தல்களிலும், பின்னர் 2014, 2019 மற்றும் 2024ல் லோக்சபா தேர்தல்களிலும் வெற்றி பெற்று, 2ம் இடத்தில் உள்ளார். பிரதமர் மோடி இன்றுடன், ஒரு மாநிலத்திலும், மத்தியிலும் 24 ஆண்டுகள் அரசாங்கத்தை வழி நடத்தியதற்கான மைல்கல்லை எட்டியுள்ளார்.