கோவை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் என்பது நேரு பிரதமராக இருந்த காலத்தில் இருந்தே இருக்கிறது என நயினார் நாகேந்திரன் கூறினார். கோவை விமான நிலையத்தில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வாக்காளர்கள் பட்டியலில் பெயர் நீக்கம், சேர்ப்பு என்பது நேரு பிரதமராக இருந்த காலத்தில் இருந்தே இருந்து கொண்டுதான் இருக்கிறது. பீகாரில் 65 லட்சம் பேர் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்கள். அதில் 30 லட்சம் பேர் ஊரில் ஆள் இல்லை. 28 லட்சம் பேர் இறந்து போனவர்கள். மீதமுள்ளவர்கள் அடுத்த இடத்திற்கு குடிபெயர்ந்து விட்டார்கள். தமிழகத்தில் இப்பணிகளை தமிழ்நாடு அரசு அதிகாரிகள்தான் செய்ய இருக்கிறார்கள். நிறைய பேர் உதவி செய்யும் நோக்கத்தோடு பணம் கொடுப்பார்கள். யாருடைய உதவியும் இல்லாமல் இருக்க வேண்டும் என சில பேர் உதவி பெற மறுப்பார்கள். அந்த வகையில் சிலர் விஜய் கொடுத்த பணத்தை திருப்பி அனுப்பி இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
+
Advertisement


