டெல்லி: ஆகஸ்ட் 3ல் நீட் முதுநிலை தேர்வு நடத்த தேசிய தேர்வுகள் வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஒரே ஷிப்டில் நீட் முதுநிலை தேர்வு நடத்த ஆகஸ்ட் 3ம் தேதி வரை தேசிய தேர்வுகள் வாரியம் அவகாம் கேட்ட நிலையில், ஆகஸ்ட் 3க்கு மேல் கால நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நீட் முதுநிலை தேர்வை 2 ஷிப்டில் நடத்துவதை ரத்துசெய்து ஒரே ஷிப்டில் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
Advertisement