டெல்லி: நீட் தேர்வில் 67 பேர் நாடு முழுவதும் முதலிடம் பெற்றுள்ள நிலையில் ராஜஸ்தானில் இருந்து மட்டும் 11 பேர் முதலிடம் பெற்றிருப்பதால் சந்தேகம் எழுந்துள்ளது. நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 15-ல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மக்களவை தேர்தல் முடிவு வெளியான நாளில் வெளியானதால் சர்ச்சை. ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியான நிலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 67 பேர் நாடு முழுவதும் முதலிடம் பெற்றுள்ளனர். நீர் தேர்வில் 720 மதிப்பெண்கள் பெற்று 67 பேர் முதலிடம் பெற்ற நிலையில் சில மாணவர்கள் 719, 718 மதிப்பெண்கள் பெற்றுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஒரு கேள்விக்கு தவறாக விடையளித்தால் நெகட்டிவ் மதிப்பெண் உட்பட 5 மதிப்பெண்கள் கழிந்து 715 மதிப்பெண்கள்தான் கிடைக்கும்.
Advertisement