Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நவராத்திரி விழா கொண்டாட்டம் பசு கோமியம் குடிச்சாதான் கர்பா நடனத்திற்கு அனுமதி: பா.ஜ தலைவர் புது யோசனை

இந்தூர்: பசு கோமியம் அருந்துபவர்களுக்கு மட்டுமே கர்பா நடன அரங்கில் அனுமதி அளிக்க வேண்டும் என்று ம.பி. பாஜ நிர்வாகி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நவராத்திரி விழா இன்று தொடங்குகிறது. அக்.12ம் தேதி வரை நடக்கும் இந்த விழா வட மாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்படும். அப்போது கர்பா எனும் கோலாட்ட நடனங்கள் இடம்பெறுவது வழக்கம். இதில் முன்பின் அறிமுகம் இல்லாத இளைஞர்களுடனும் இணைந்து இளம்பெண்கள் நடனமாடுவது உண்டு. இந்துக்கள் மட்டும் அனுமதிக்கப்படும் இந்த நிகழ்ச்சியில் முஸ்லிம் இளைஞர்களும் நுழைந்து விடுவதாகப் புகார்கள் எழுகின்றன. இதை தடுக்க ஒவ்வொரு ஆண்டும் புதிய உத்தியை நிகழ்ச்சி நடத்துவோர் கடைபிடிக்கின்றனர். இந்த ஆண்டு அதற்கான சர்ச்சைக்குரிய யோசனையை இந்தூர் ஊரக மாவட்ட பாஜ தலைவர் சின்ட்டு வர்மா அளித்துள்ளார்.

அவர் கூறுகையில்.’ இந்த வருடம் கர்பா பந்தலுக்கு நுழையும் முன் அளிக்கப்படும் பிரசாதத்தில் மாற்றம் தேவை. இதில் நமது கோமாதா பசுவின் கோமியத்தை உள்ளே நுழையும் அனைவருக்கும் பருகுவதற்காக அளிக்க வேண்டும். இத்துடன் நெற்றியில் திலகம் சந்தனத்துடன் பூசிக்கொள்ள வேண்டும் .தற்போது ஆதார் அட்டை மூலம் கர்பா பந்தலில் அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த அட்டையில் மார்பிங் செய்தும் பெயர்களை மாற்றலாம். எனவே பசுவின் கோமியத்தை பருக அளிப்பது, நமக்கு கர்பா பந்தலில் பாதுகாப்பை அளிக்கும். இதைப் பருகாதவர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது’ என்றார்.