அவிநாசி: 2026 சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். பாஜ சார்பில் சமூக ஊடகவியலாளர்கள் சந்திப்புக் கூட்டம், தொழில் வல்லுநர்கள் கூட்டம், பாஜ நிர்வாகிகள் கூட்டம் அவிநாசியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஒன்றிய செய்தி மற்றும் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது: அவிநாசி புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் உரிய நீதி கிடைக்க வேண்டும்.
திருக்குறள், தமிழ் இலக்கியங்களை போற்றுவது பிரதமர் நரேந்திர மோடிதான். உலகம் முழுவதும் திருவள்ளுவருக்கு கலாசார மையங்களை ஏற்படுத்தி 85 மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்த்து தந்துள்ளார். வருகிற 2026 சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.