புலவயோ: நமீபியா அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் நேற்று, ஜிம்பாப்வே அணி 33 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நமீபியா கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் நமீபியா - ஜிம்பாப்வே அணிகள் மோதின. முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணியின் துவக்க வீரர்கள் பிரையன் பென்னட், டடிவனஷே மருமணி அபாரமாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 124 ரன் குவித்தனர். பிரையன் 94 ரன்னும், மருமணி 62 ரன்னும் விளாசி ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் ஜிம்பாப்வே, 3 விக்கெட் இழப்புக்கு 211 ரன் குவித்தது. அதன் பின், 212 ரன் வெற்றி இலக்குடன் நமீபியா களமிறங்கியது. ஜிம்பாப்வேயின் பந்து வீச்சை சமாளிக்க முடியாத நமீபியா வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். ஜேன் நிகோல் லாப்டி ஈடன் மட்டும் 24 பந்துகளில் 38 ரன் எடுத்தார். 20 ஓவர் முடிவில் நமீபியா, 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன் மட்டுமே எடுத்தது. அதனால், 33 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி முதல் வெற்றியை பதிவு செய்து, தொடரில் முன்னிலை வகிக்கிறது.
+
Advertisement