Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம் : காவல்துறை அறிவிப்பு

Mylapore, Kapaleeshwarar Templeசென்னை : கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு மயிலாப்பூரில் நாளை முதல் வரும் 12ம் தேதி போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலின் வருடாந்திர பங்குனிவிழா இன்று முதல் வரும் 12ம் தேதி வரை நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்களின் போக்குவரத்து வசதியை கருதி தேவைப்படும் நேரங்களில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும். மேற்கண்ட நாட்களில் கீழ்க்கண்டவாறு அருள்மிகு கபாலீஸ்வரர் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கோயிலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது

 தேவடி தெருவிலிருந்து- நடுத்தெரு மற்றும் சித்ரகுளம்

 நடுத்தெரு மற்றும் சுந்தரேஸ்வரர் தெருவிலிருந்து - கிழக்கு மாட தெரு

 வடக்கு சித்ரகுளத்திலிருந்து - கிழக்கு மாட தெரு

 மேற்கு சித்ரகுளம் தெருவிலிருந்து - தெற்கு மாட தெரு

 டி.எஸ்.வி கோயில் தெருவிலிருந்து - தெற்கு மாட தெரு

 ஆடம்ஸ் தெருவிலிருந்து - தெற்கு மாட தெரு

 ஆர்.கே. மடம் சாலையிலிருந்து - தெற்கு மாட தெரு

 ஆர்.கே. மடம் சாலையிலிருந்து - வடக்கு மாட தெரு

 கச்சேரி சாலையிலிருந்து - மத்தள நாராயணன் தெரு

 கிழக்கு அபிராமபுரத்திலிருந்து - வெங்கடேசஅக்ரஹார தெரு

 புனிதமேரி சாலையிலிருந்து - ஆர்.கே. மடம் சாலையில் தெற்கு மாடவீதி நோக்கி

 டாக்டர் ரங்கா சாலையிலிருந்து - வெங்கடேச அக்ரகாரம் சாலை

 முண்டககன்னியம்மன் கோயில் தெருவிலிருந்து- கல்விவாறு தெரு நோக்கி

 முண்டககன்னியம்மன் கோயில் தெருவிலிருந்து - கச்சேரிசாலை நோக்கி ராயப்பேட்டை நெடுஞ்சாலையிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக அடையார் செல்லும் வாகனங்கள், லஸ் சர்ச் ரோடு, டிசில்வா ரோடு, பக்தவச்சலம் ரோடு, ரங்கா ரோடு, சி.பி.ராமசாமி சாலை, காளியப்பா சந்திப்பு, காமராஜ்சாலை, சீனிவாச அவென்யூ, ஆர்.கே.மடம் சாலை வழியாக கிரீன்வேஸ் சந்திப்பை அடையலாம்.

அடையாரிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள் ஆர்.கே.மடம் ரோடு, திருவேங்கடம் தெரு, வெங்கட கிருஷ்ணா ரோடு, சிருங்கேரி மடம் சாலை, வாரன்ரோடு, ரங்கா ரோடு, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ, அமிர்தாஞ்சன் சந்திப்பு, கற்பகாம்பாள் நகர், பி.எஸ். சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக இலக்கை அடையலாம். ஆழ்வார்பேட்டை சந்திப்பிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக செல்லும் வாகனங்கள் ஆலிவர் சாலை, பி.எஸ்.சிவசாமி சாலை சந்திப்பு, விவேகானந்தர் கல்லூரி, ராயப்பேட்டை ெநடுஞ்சாலை வழியாக இலக்கை அடையலாம்.

மேலும் வரும் 5ம் தேதி அதிகாரநந்தி திருவிழா அன்று காலை 5 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும், வரும் 9ம் தேதி தேர்திருவிழா அன்று காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும் மற்றும் வரும் 10ம் தேதியன்று அறுபத்து மூவர் திருவிழா அன்று மதியம் 1 மணி முதல் நிகழ்ச்சி நிறைவடையும் வரையிலும் மேற்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செயல்படுத்தப்படும்.

அதைப்போன்று வரும் 5ம் தேதி அதிகாரதந்தி திருவிழா 9ம் தேதி தேர்திருவிழா, 10ம் தேதி அறுபத்துமூவர் திருவிழா அன்றும் சன்னதி தெரு, கிழக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, ராமகிருஷ்ணா மடம் சாலை மேற்கு மாடவீதி மற்றும் வடக்கு மாடவீதி ஆகிய இடங்களில் எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை. அந்த நாட்களில் கீழ்கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு அபிராமபுரத்திலிருந்து வரும் பக்தர்களின் வாகனங்கள் சாய்பாபா கோயில் அருகில், வெங்கடேச அக்ரகாரம் திருமயிலை பறக்கும் ரயில்வே நிலைய மேம்பாலத்தின் கீழ் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. 100 இரு சக்கர வாகனம் மற்றும் 30). ராயபேட் நெடுஞ்சாலையில் இருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் பக்தர்களின் வாகனங்கள் லஸ் சர்ச் ரோடு, காமதேனு கல்யாண மண்டபம் எதிரில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (100 இரு சக்கர வாகனம் மற்றும் 15 கார்).

செயின்ட் மேரீஸ் சாலை மற்றும் மந்தவெளி வீதியிலிருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் பக்தர்களின் வாகனங்கள் பள்ளி அருகே கபாலீஸ்வரர் கோவில் மைதானத்தில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (400 இரு சக்கர வாகனம் மற்றும் 80 கார்).

காவல்துறை வாகனங்கள் சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ள ரசிக ரஞ்சனி சபா வளாகத்தில் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது(100 இரு சக்கர வாகனம் மற்றும் 20 கார்). வாகன ஓட்டுநர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.