Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சென்னையில் மேலும் 10 இடங்களில் முதல்வர் படைப்பகம் அமைப்பதற்கான பணிகளை தொடங்கியது தமிழ்நாடு அரசு..!!

சென்னை: சென்னையில் மேலும் 10 இடங்களில் முதல்வர் படைப்பகம் அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியது. சென்னை மாநகராட்சி சார்பில் 3 இடங்களில் முதல்வர் படைப்பகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக அறிவார்ந்த சூழலை உருவாக்கும் வகையில், சென்னை கொளத்தூரில் உள்ள முதல்வர் படைப்பகம் இளைஞர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

போட்டித் தேர்வுகளுக்கான நூல்களுடன் கூடிய நூலகம், கட்டணமில்லா இணைய வசதி, குளிரூட்டப்பட்ட ஆலோசனைக் கூடங்கள் மற்றும் கணினி உள்ளிட்ட அலுவலக கட்டமைப்புடன் கூடிய Co-Working Space, புத்தொழில் முனைவோர், ஐடி பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறுவது மட்டுமின்றி, தங்களின் இல்லங்களுக்கு அருகிலேயே பெண்களும் பணிபுரிந்திடும் பெரும் வாய்ப்பு முதல்வர் படைப்பகத்தின் மூலம் உருவாகும். முதல்வர் படைப்பகம் கோவை, மதுரை, திருச்சி, சேலம், தாம்பரம் மற்றும் ஆவடி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் விரைவில் முதல்வர் படைப்பகம் உருவாக்கப்பட உள்ளது.

இந்நிலையில், திருவல்லிக்கேணி ஜானி பாட்சா சாலை, பாரதி சாலை, அண்ணாநகர், காந்தி நகரில் முதல்வர் படைப்பகம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அயனாவரம், பக்தவச்சலம் பூங்கா, சுப்புராயன் தெரு, மங்களாபுரத்தில் முதல்வர் படைப்பகம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. மேலும், அமைந்தகரை, கொரட்டூர் புத்தகரம், பெரியமேடு கண்ணப்பர் திடல், திருவெற்றியூர் நெடுஞ்சாலையிலும் முதல்வர் படைப்பகம் அமைப்பதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.