மும்பை: மும்பையில் தரையிறங்கும் போது ஏர் இந்தியா விமானத்தின் 3 டயர்கள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக ஓடுபாதையை விட்டு விலகிச் சென்றபோது விமானத்தின் 3 டயர்கள் வெடித்தன. கொச்சியில் இருந்து மும்பை சென்று தரையிறங்கியபோது ஓடுபாதையை விட்டு தாண்டியது. ஓடுபாதையை தாண்டி, டயர்கள் வெடித்ததால் விமானத்தின் என்ஜினின் சுற்றுத் தகடு சேதம் அடைந்துள்ளது. பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்
+
Advertisement