Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட நிலையில் உ.பியில் மருமகனுடன் ஓடிப்போன மாமியார் போலீசில் சரண்: மாப்பிள்ளையையே திருமணம் செய்து கொள்வேன் என அடம்

அலிகார்: உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் மனோகர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேந்திரகுமார், சப்னா தேவிதம்பதி. இவர்களின் மகள் ஷிவானிக்கு பக்கத்து கிராமத்தை சேர்ந்த ராகுல் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, 10ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் திடீரென்று கடந்த 6ம் தேதி சப்னா மாயமானார். அதேநாளில் ராகுலும் மாயமானார். இதுகுறித்து இருவீட்டாரும் காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.  இந்நிலையில் சப்னாவும், ராகுலும் ஜோடியாக அலிகாரின் டாடன் காவல்நிலையத்தில் நேற்று சரணடைந்தனர். அப்போது சப்னா தேவி காவல்துறையினரிடம், “நான் ராகுலை மிகவும் நேசிக்கிறேன். ராகுலை திருமணம் செய்த கொள்ள விரும்புகிறேன். இது ஒரு குறுகிய கால உறவல்ல. வாழ்நாள் உறவு” என கூறி உள்ளார்.

இதுபற்றி ராகுல் கூறுகையில், “சப்னா தேவியை அவரது குடும்பத்தார் மிகவும் சித்ரவதை செய்து வந்துள்ளனர். இதனால் சப்னா தேவி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக என்னிடம் சொன்னார். அதனால் அவர் மீது இரக்கம் ஏற்பட்டு, அவருக்கு உதவவே சப்னா தேவியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன்” என்றார். இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது, “ஷிவானி திருமண நிச்சயதார்த்தத்தின்போது அவரது குடும்பத்தினர் ராகுலுக்கு செல்போன் ஒன்றை கொடுத்துள்ளனர். அந்த செல்போனை பயன்படுத்திதான் மகளின் தாயரும், மருமகனும் செல்போனில் நீண்ட நேரம் பேசி உறவை வளர்த்து கொண்டுள்ளனர்” என்று தெரிவித்தனர்.