Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சாலைகள் மக்களை இணைக்கிறது பாராட்டிய நடிகைக்கு மோடியின் உடனடி பதில்: நெட்டிசன்கள் விமர்சனம்

புதுடெல்லி: சாலைகள் மக்களை இணைக்கிறது என்று மோடி அரசை மறைமுகமாக பாராட்டிய நடிகைக்கு, மோடி உடனடி பதில் அளித்து பாராட்டியது குறித்து நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். பாலிவுட் நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட வீடியோ பதிவில், ‘மும்பை மற்றும் நவி மும்பையை இணைக்கும் அடல் சேது பாலம் வந்ததால், இரண்டு மணி நேர பயணம் 20 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையில் ெபரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதனால் பல நகரங்களுக்குச் செல்வதை எளிதாக்க முடிகிறது. மும்பையிலிருந்து நவி மும்பை, கோவா முதல் மும்பை, பெங்களூரு முதல் மும்பை என்று எல்லா இடங்களுக்கும் பயணம் செய்வது மிகவும் எளிதாகிவிட்டது. இதுபோன்ற அற்புதமான உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன். எனவே நாட்டின் வளர்ச்சிக்கு வாக்களிக்க வேண்டும்’ என பதிவிட்டிருந்தார்.

மற்ெறாரு வீடியோவில், ‘தென் இந்தியாவிலிருந்து வட இந்தியா வரை... மேற்கு இந்தியாவிலிருந்து கிழக்கு இந்தியா வரை... சாலைகள் மக்களை இணைக்கிறது... இதயங்களை இணைக்கிறது’ என்று பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட சில மணி நேரத்தில், அந்த வீடியோ பதிவை ‘டேக்’ செய்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘நிச்சயமாக நீங்கள் சொல்வது சரிதான், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும், மக்களை இணைப்பதையும் விட திருப்திகரமான ஒன்று எதுவும் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் நடிகையின் பாராட்டு பதிவுக்கு மோடி உடனடியாக பதிலளித்ததை பலரும் பலவிதமாக சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.