Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரமாண்ட ரோடு ஷோ: வழிநெடுகிலும் மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு

மதுரை: திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோட் ஷோ சென்றபோது வழிநெடுக்கிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில், 200 தொகுதிகளுக்கு மேல் வெல்ல வேண்டும் என்ற நோக்கில் திமுக தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டு வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களால், அவருக்கு பொதுமக்களின் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர்.

தேர்தலை எதிர்கொள்ள திமுகவில் தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள், மண்டல வாரியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு மண்டல பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 3ம் தேதி சென்னையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மதுரையில் ஜூன் 1ம் தேதி பொதுக்குழு நடத்தப்படும் என திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி மதுரை, உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் திமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று பகல் ஒரு மணியளவில் மதுரைக்கு வருகிறார்.

விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட திமுக சார்பில், அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பின் விடுதியில் ஓய்வெடுக்கும் முதல்வர், மாலை 4 மணிக்கு 25 கிமீ தூரத்திற்கு பிரமாண்ட ரோடு ேஷா மூலம் மக்களை சந்தித்து வருகிறார். திருப்பரங்குன்றம், மதுரை மத்தி, மதுரை மேற்கு ஆகிய 3 சட்டமன்ற தொகுதி மக்களை நேரில் சந்திக்கும் வகையில் ரோடு ஷோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரை அவனியாபுரம் மருதுபாண்டியர்கள் சிலையில் இருந்து தனது ரோடு ஷோவை தொடங்கினார். தொடர்ந்து வில்லாபுரம், ெஜயவிலாஸ் பாலம் சந்திப்பு, ஜெய்ஹிந்த்புரம், ஜீவா நகர், சுந்தர்ராஜபுரம் மார்க்கெட், டிவிஎஸ் நகர் புதிய தரைப்பாலம், பழங்காநத்தம், வஉசி மேம்பாலம்,

பைபாஸ் ரோடு, பொன்மேனி சந்திப்பு, காளவாசல், குரு தியேட்டர் சந்திப்பு, ஆரப்பாளையம் பஸ் நிலையம், ஜல்லிக்கட்டு ரவுண்டானா, ஆரப்பாளையம் கிராஸ் மற்றும் மன்னர் திருமலை நாயக்கர் சிலை, புது ஜெயில் ரோடு சந்திப்பு வரை சுமார் 25 கிமீ தூரத்திற்கு ரோடு ஷோ நடத்துகிறார். செல்லும் வழியில் மக்களை சந்தித்து பேசுகிறார். அவர்கள் அளிக்கும் மனுக்களையும் பெற்றுக் கொள்கிறார். தமிழகத்திலேயே முதல்முறையாக 25 கிமீ தூரம் ரோடு ஷோ நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. . முதலமைச்சர் ரோட் ஷோ மேற்கொள்ள வழிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, ட்ரோன் பறப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.