Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

4 ஆண்டுகளாக முதல்வராக இருந்த எடப்பாடி அம்மா உணவகத்தில் ஒருநாளாவது ஆய்வு செய்தாரா? அமைச்சர் சேகர்பாபு கேள்வி

பெரம்பூர்: கொளத்தூர் சட்டமன்ற தொகுதி அகரம் ஜெகநாதன் தெருவில் உள்ள மாநகராட்சி பன்னோக்கு மையத்தில் அமைய உள்ள பகிர்ந்த பணியிட மையம், கொளத்தூர் டயாலிசிஸ் மையம் அமைய உள்ள இடம், செங்குன்றம் சாலையில் அமைய உள்ள புதிய அங்காடிக்கான இடம், மக்கள் சேவை மையம் ஆகிய இடங்களை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை செயலாளர் காகர்லா, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தாத் ஜகடே, மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், மண்டல குழுத்தலைவர் சரிதா மகேஷ் குமார். பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பின்னர், அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: கொளத்தூர் பகுதி மக்கள் வருவாய் சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு அதிக தூரம் பயணிக்க வேண்டியுள்ளதால் தனி வட்டாட்சியர் அலுவலகம் அமைக்கவும், துணை பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் அமைக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக, ஆக்கிரமிப்பில் இருந்த 1 ஏக்கர் இடம் மீட்கப்பட்டு அங்கு பணிகள் நடைபெறுகிறது. எதிர்கட்சி துணை தலைவருக்கு எங்கு என்ன பணி நடைபெறுகிறது என்று தெரியாது. ஏன் என்றால் ஆர்.பி.உதயகுமாருக்கு சென்னையை பற்றி தெரியாது. கொரோனா காலத்தில் இவர்கள் எல்லாம் எங்கு சென்றார்கள்.

அப்போதைய எதிர்கட்சி தலைவர், தற்போதையை முதல்வர் ஆட்சியில் இல்லாத போதே அம்மா உணவகங்களுக்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். தற்போதும் ஆய்வுகளை மேற்கொள்கிறார். 4 ஆண்டுகள் முதல்வராக இருந்த எடப்பாடி அம்மா உணவத்தில் ஒருநாளாவது ஆய்வு செய்தாரா, திமுக ஆட்சிக்கு வந்த போது எதிர்கட்சி தலைவர் படம் பள்ளி புத்தக பையில் இருந்தது. ஆனால் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் அதனையும் மக்கள் பணம் வீணாகாமல் கொடுக்க செய்தார் முதல்வர். எதிர்கட்சியினரின் கடுமையான விமர்சனங்கள் அரசியல் நாகரிகமற்றவை. நாங்கள் அவ்வாறு பேச விரும்பவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.