Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அமைச்சர் எ.வ.வேலு பேச்சு‘கலைஞர் எனும் தாய்’ புத்தகத்தை 11 ஆண்டுகாலமாக எழுதினேன்

சென்னை: ‘கலைஞர் எனும் தாய்’ புத்தகத்தை 11 ஆண்டுகாலமாக அரசு பணிகள், கட்சி பணிகள் இல்லாமல் இருக்கும்போது, பல புத்தகங்களை படித்து குறிப்பு எடுத்து எழுதினேன் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார். கலைஞர் எனும் தாய் புத்தகம் வெளியீட்டு விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: கலைஞர் எனும் தாய் புத்தகத்தை 11 ஆண்டுகாலமாக அரசுப் பணிகள், கட்சி பணிகள் இல்லாமல் இருக்கும் போது, இரவு நேரத்தில் பல புத்தகங்களை படித்து குறிப்பு எடுத்து எழுதினேன்.

தமிழ்நாட்டின் மாமனிதர் முதல்வர் மு.க.ஸ்டாலின் கையால் வெளியிடவேண்டும் என்று கருதினேன். தாய்நாட்டின் தாயாக இருந்து இந்த புத்தகத்தை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவிக்கிறேன். 49 ஆண்டுகாலம் கலையுலகத்தின் காந்தமாக ரஜினிகாந்த் இருக்கிறார். இன்றைக்கும் அதனால் தான் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்.

இந்த புத்தகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, நீங்கள் தான் பெறவேண்டும் என்று சொன்ன மறுகணமே, எதையும் எதிர்பார்க்காமல் வருவதாக சொன்னார். முதல்வன்’ படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று ரஜினிகாந்திடம் முதலில் கேட்கப்பட்டது. அப்போது அவர், தமிழ்நாட்டில் பெரியவர் (கருணாநிதி) ஆண்டு கொண்டு இருக்கிறார். நான் அதில் நடிக்க உடன்பாடு இல்லை. பெரிய உள்ளத்தோடு அவர் அதில் நடிக்கவில்லை என்று கூறிய ரஜினிகாந்துக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.