Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மிக்-21 போர் விமானங்களுக்கு விடை கொடுக்க இந்தியா முடிவு

புதுடெல்லி: ரஷ்ய தயாரிப்பான மிக்-21 போர் விமானங்கள் முதன்முறையாக கடந்த 1963ம் ஆண்டு சோதனை அடிப்படையில் இந்திய விமான படையில் சேர்க்கப்பட்டன. அதன்பின் இந்திய விமான படையின் முதுகெலும்பாக மாறிய மிக்-21 போர் விமானங்கள், கடைசியாக 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற வருடாந்திர விமான படை தின அணிவகுப்பில் பங்கேற்றன. மிக்-21 விமானங்கள் தொடர்ந்து விபத்தில் சிக்கி வந்ததால் அவற்றை சேவையில் இருந்து நீக்க முடிவெடுக்கப்பட்டது.