Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேட்டூர் அணை கட்டும்போது கூலி வேலைக்கு சென்ற 126 வயது மூதாட்டி மரணம்

காங்கயம்: திருப்பூர் மாவட்டம், காங்கயம், திரு.வி.க நகரை சேர்ந்தவர் ராமன் மனைவி பழனியம்மாள் (126). இவருக்கு 12 மகன்கள். கணவன், 11 மகன்களும் வயது முதிர்வால் இறந்துவிட 85 வயது மகன் மாரிமுத்து மட்டும் தற்போது உள்ளார். இவர்கள் குடும்பத்தில் பேரன், பேத்திகள், கொள்ளுப் பேரன், கொள்ளுப் பேத்தி என தற்போது 152 பேர் உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் காங்கயம் பகுதியிலேயே மூத்த வயதுடையதாக கருதப்படும் பாட்டி பழனியம்மாள் தனது 126வது வயதில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். மூதாட்டி பழனியம்மாள் தனது 13-வது வயதில் மேட்டூர் அணை கட்ட கூலி வேலைக்கு சென்றதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இவருக்கு தாரை, தப்பட்டை, பிளக்ஸ் பேனர்கள் வைத்தும், அலங்கார தேர் செய்தும் அவரது உறவினர்கள் இறுதிச்சடங்குகளை நடத்தினர்.