சேலம்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 10,000 கன அடியில் இருந்து 6000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. டெல்டா பகுதியில் பரவலான மழைப்பொழிவு இருப்பதால் பாசனத்திற்கு தண்ணீர் தேவை சற்று குறைவாக உள்ளது. இதனால், நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
+
Advertisement