Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேட்டுப்பாளையம் சார்பதிவாளர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பேருந்து நிலையம் அருகே சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு லஞ்சப்பணம் கைமாறுவதாக கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று மாலை 5.30 மணியளவில் திடீரென சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்த 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் கதவை மூடி அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்தவர்களிடமும், அங்கிருந்த வெளி நபர்களிடமும் விசாரணை நடத்தினர். சோதனையின் முடிவில் எவ்வளவு பணம் பிடிபட்டது? எத்தனை பேருக்கு தொ டர்பு? என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரிய வரும். தாலுகா ஆபீசிலும் சோதனை: திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று மாலை 5 மணியளவில் லஞ்ச ஒழிப்புதுறை டிஎஸ்பி வேல்முருகன் தலைமையில் போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது, அலுவலகத்தில் உள்ள சர்வேயர் பிரிவு மற்றும் அலுவலக அறைகளில் இருந்த டேபிள், டிரா ஆகிய பகுதிகளில் சல்லடை போட்டு சோதனை செய்தனர்.

இதில் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.56 ஆயிரத்து 130 பறிமுதல் செய்யப்பட்டது. வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தேனீர் கடைகளில் பண பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதா எனவும் விசாரணை நடத்தினர். மேலும் இங்கு பணிபுரியும் தாசில்தார் முதல் கீழ்நிலை ஊழியர்கள் வரை மொத்தம் 20க்கும் மேற்பட்டவர்களின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை குறித்து கடந்த 6 மாத விவரங்களை சேகரித்தனர். அதில் ரூ.25 லட்சத்து 35 ஆயிரத்து 824 இருப்பது தெரியவந்தது. இந்த பண விவரங்கள் குறித்து தனித்தனியாக அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.