Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மெத்தனால் குடித்தால் ஒவ்வொரு உடல் உறுப்பாக பாதிக்கப்படும்: மருத்துவர்கள் ‘ஷாக்’

விஷ சாராய பலிக்கு காரணமாக மெத்தனால் குடித்தால் ஒவ்வொரு உடல் உறுப்பாக பாதிக்கப்படும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘மெத்தனால் என்பது கார்பன்மோனாக்சைடு வாயு மற்றும் ஹைட்ரஜன் கலந்த ஒரு ரசயான திரவமாகும். நமது உடல் மற்றும் காய்கறி, பழங்கள், உணவு பொருட்களில் கூட மெத்தனால் உள்ளது. ஆனால் மிக மிக குறைந்த அளவே உள்ளது. அதிக அளவில் மெத்தனால் சேர்ந்துவிட்டால் நச்சுதன்மையாக மாறிவிடும். 2 மில்லி அளவு உட்கொண்டாலே சிறுவர்களின் உயிரை பறித்து விடும். பிளாஸ்டி தயாரிப்பு, ஜவுளி தொழில், விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் மருத்து உள்ளிட்டவைக்கு மெத்தானல் பயன்படுத்தப்படுகிறது.

போதைக்காக குடிக்கும் சாராயத்தில் எத்தனால் இருக்கும். விஷச்சாராயத்தில் மெத்தனால் கலக்கப்படுகிறது. இது உடலுக்கு சென்று வளர்சிதை மாற்ற செயல்பாடு அடையும்போது பார்மிக் அமிலமாக (Formic acid) மாறுகிறது. அப்படி உடலில் பார்மிக் அமிலம் உருவாகும்போது உடலுக்கு அது மிகவும் ஆபத்தை விளைவிக்கிறது. மெத்தனால் கலந்த சாராயத்தை குடிக்கும் போது ஆரம்பத்தில் லேசான மயக்கம், வாந்தி, குமட்டல், தலைவலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். மேலும், உடலில் உள்ள குடல் பகுதி வெந்து போகும். அதனைத்தொடர்ந்து சுயநினைவு இழத்தல், மூளை பாதிப்பு, வயிறு புண் ஆகுதல், கண் நரம்பு பாதித்து பார்வை மங்குதல், பார்வை இழப்பு உள்ளிட்ட தீவிர பாதிப்புகளையும் உண்டாக்கும்.

இந்த பாதிப்பிற்கு சரியான நேரத்தில் சிகிச்சை பெறாத போது சிறுநீரகம், இதயம், நுரையீரல் உள்ளிட்ட ஒவ்வொரு உடல் உறுப்பாக பாதிக்கப்படும் நிலை உள்ளது. இந்த மெத்தனால் கலந்த சாராயத்தை குடிக்கும் போது உடலில் அமிலத்தன்மையை உண்டாக்குகிறது. விஷச்சாராயம் குடித்த பிறகு பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். அங்கே முதல் உதவி செய்யப்பட்டு, ஃபோமெபிசோல் (Fomepizole) என்ற மெத்தனாலின் நச்சுத்தன்மையை குறைக்கும் தடுப்பு மருந்து கொடுக்கப்படும்.

சில மருத்துவமனையில் இந்த மருத்தின் இருப்பு பற்றாக்குறையாக இருக்கும் பட்சத்தில் டயாலிசிஸ் செய்யப்படும். அவ்வாறு செய்யப்படும் போது உடலில் கலக்கப்பட்ட மெத்தனால் முழுவதும் வெளியில் வரும். பிறகு தொடர்ந்து சிகிச்சை அளித்த பிறகு அவர்கள் படிப்படியாக குணமடைவார்கள். பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் உயிர் போகும் அபாயமாகும். லேசான அறிகுறிகள் தெரிந்தவுடன் சிகிச்சை அளிக்கும் போது உடல் உறுப்பு பாதிக்கப்படுவதை தடுக்க முடியும்’ என்றனர்.

* விடிய விடிய பிரேத பரிசோதனை

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உடல்களை கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் மருத்துவ குழுவினர்கள் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பிரேத பரிசோதனை மேற்கொண்டு நள்ளிரவு மற்றும் நேற்று காலையில் உறவினர்களிடம் 25 உடல்களை ஒப்படைத்தனர்.

* 56 பேர் குழு தீவிர சிகிச்சை

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிப்பதற்காக சேலம், விழுப்புரம், திருச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டத்தில் இருந்து சிறப்பு அரசு மருத்துவ குழுவினர்கள் 56 பேர் தமிழக அரசு உத்தரவுபடி நேற்று வந்தனர். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

* உயிரிழந்த 43 பேர் பட்டியல்

விஷசாராயம் குடித்து பல்வேறு மருத்துவமனைகளில் பலியான 43 பேர் விவரம் வருமாறு:

கள்ளக்குறிச்சி

1) ஜெகதீஷ் (60)

2) சுரேஷ் (40)

3) வடிவுக்கரசி (32)

4) கந்தன் (47)

5) அய்யாவு (65)

6) நூர்பாஷ்கர் (45)

7) முருகன் (40)

8) செல்வம் (30)

9) ஆறுமுகம் (65)

10) தனக்கோடி (60)

11) கோபால் (52)

12) கணேசன் (70)

13) ஜெகதீஸ்வரன் (58)

14) பூவரசன் (28)

15) குப்புசாமி(75)

16) ராமகிருஷ்ணன்(65)

17) லட்சுமி(50)

18) அன்வர்பாஷா (70)

19) சின்னபிள்ளை (55)

20) ஜெகதீசன் (42)

21) மணி (39)

22) கண்ணன் (39) மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

* சேலம்

1) மனோஜ்குமார் (33)

2) ரவி (60),

3) நாராயணசாமி (65)

4) சுப்ரமணி (60)

5) ராமு (50)

6) விஜயன் (58)

7) ஆனந்தன் (50)

8) ஆனந்த் (47)

9) எஸ். ராஜேந்திரன் (50)

10 ஆர்.ராஜேந்திரன் (65)

11 பி.ராஜேந்திரன் (55)

* விழுப்புரம்

1) மணிகண்டன்(35)

2) சேகர்(57)

3) சுரேஷ் (45)

4) பிரவீன்குமார் (29)

* புதுச்சேரி

1) இந்திரா(48)

2) கிருஷ்ணமூர்த்தி (61)

3) சுப்ரமணி (58)