Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நாட்டிலேயே அதிகபட்ச ராம்சர் தலங்களை கொண்டதாக தமிழ்நாடு விளங்குகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: நாட்டிலேயே அதிகபட்ச ராம்சர் தலங்களை கொண்டதாக தமிழ்நாடு விளங்குகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திராவிட மாடல் அரசு ஈர நிலங்களை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. இயற்கை பாரம்பரியத்தை பாதுகாக்க திராவிட மாடல் அரசு தொடர்ந்து முனைப்புடன் செயல்படும் என்று கூறியுள்ளார்.

உலக ஈரநிலங்கள் நாளை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில்:

உலக ஈரநிலங்கள் நாளான இன்று, ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை மற்றும் தேர்தங்கல் பறவைகள் காப்பகங்கள் புதிய ராம்சர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள செய்தியைப் பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இத்துடன், தமிழ்நாட்டில் உள்ள ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை இந்தியாவிலேயே மிக அதிகமாக 20-ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் 19 இடங்கள் நாம் 2021-இல் தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம் தொடங்கியதற்குப் பிறகு ராம்சர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. ஈரநிலங்களைப் பாதுகாப்பதில் நமது திராவிட மாடல் அரசு உறுதியாக உள்ளது. வளமான நமது இயற்கை மரபைக் காக்க மேலும் ஆக்கப்பூர்வமான பல நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுப்போம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.