Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

‘என்னோடு சேர்ந்து வாழ்ந்து இன்னொருவரை மணப்பதா? ’பிறந்த குழந்தையோடு வந்து திருமணத்தை நிறுத்திய ஆசிரியை: இணைந்து வாழ சம்மதித்த இன்ஜினியர்

மதுரை: ஒன்றாக வாழ்ந்து விட்டு, வேறொருவரை மணப்பதாக கூறி ஐடி இன்ஜினியரின் திருமணத்தை குழந்தையோடு வந்து நிறுத்திய ஆசிரியையால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை, மகாலெட்சுமி நகரைச் சேர்ந்த ஐடி நிறுவன பொறியாளர் பாலசந்தர் (32). இவருக்கும், தேனியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி பெண்ணுக்கும் நேற்று காலை திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்கான சடங்குகள் அய்யர்பங்களா பகுதியில் உள்ள மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. திருமண மண்டபத்தில் இருவீட்டாரும் இருந்துள்ளனர். திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்தது.

நேற்று அதிகாலை மதுரை சூர்யாநகர் பகுதியை சேர்ந்த ஒரு தனியார் பள்ளி ஆசிரியை, கைக்குழந்தையுடன் அழுதபடி திருமண மண்டபத்திற்கு வந்தார். அங்கிருந்தவர்களிடம், பாலசந்தர் தன்னை காதலித்து, தாலி கட்டி சேர்ந்து வாழ்ந்து வந்தார். பிறந்து சில நாட்களே ஆன இந்த குழந்தை அவருக்கு பிறந்தது. எனக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து வழக்கு நடந்தபோது, பாலசந்தருடன் பழக்கம் ஏற்பட்டது. விவாகரத்து வழக்கு முடிந்ததும் என்னை திருமணம் செய்து ெகாள்வதாக கூறியதால் இருவரும் ஒன்றாக வாழ்ந்தோம். விவாகரத்து வழக்கு முடிந்த பிறகே எனக்கு தாலி கட்டினார். நான் கர்ப்பமான நிலையில் கலைக்க கூறினார். நான் கேட்கவில்லை. தற்போது குழந்தை பிறந்துள்ளது எனக்கூறியபடி கண்ணீர் விட்டு அழுதார்.

இதனைக் கேட்டு இரு வீட்டார் ெபரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து திருமணத்திற்கு தயாராக இருந்த பெண் வீட்டார், திருமணத்தை நிறுத்திவிட்டு அதிகாலையே கிளம்பி தேனிக்கு சென்றனர். இதுகுறித்து மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். அப்போது ஆசிரியையுடன் சேர்ந்து வாழ பாலசந்தர் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவரையும் போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.