Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

10 நாளில் திருமணம்; மகளுக்கு நிச்சயித்த மாப்பிள்ளையுடன் தாய் ஓட்டம்: ரூ.3.50லட்சம் ரொக்கம், ரூ.5 லட்சம் நகைகளையும் தூக்கிச்சென்றார்

அலிகார்,ஏப்.10: உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் மட்ராக் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் ஜிதேந்திரகுமார். இவரது மனைவி அப்னா தேவி(40). இவர்களது மகள் ஷிவானி. ஜிதேந்திரகுமார் பெங்களூருவில் வேலைபார்த்து வருகிறார். அவரது மகள் ஷிவானிக்கு, உத்தரகாண்ட்டில் வேலை செய்யும் ராகுல் என்பவருடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டு இருந்தது. அடுத்த வாரம் 16ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு உறவினர்களுக்கு வழங்கப்பட்டு விட்டன.

ஆனால் கடந்த 6ம் தேதி மணப்பெண்ணின் தாய் அப்னா தேவியும், மணமகன் ராகுலுடன் மாயமாகி விட்டனர். அப்போது அப்னாதேவி வீட்டில் இருந்த ரூ.3.50 லட்சம் ரொக்கப்பணம், ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகளை தூக்கிச்சென்று விட்டார். இதுபற்றி இப்போது மட்ராக் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி ஷிவானி கூறுகையில்,’எனக்கு ஏப்ரல் 16ஆம் தேதி ராகுலுடன் திருமணம் நடக்க இருந்தது. என் தாய் ஞாயிற்றுக்கிழமை அவனுடன் ஓடிவிட்டார். ராகுலும் என் தாயும் கடந்த மூன்று நான்கு மாதங்களாக போனில் அதிகம் பேசுவார்கள். அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் விரும்புவது பணம் மற்றும் நகைகளை எங்களிடம் திருப்பித் தர வேண்டும்’ என்றார். இதுகுறித்த புகாரின் பேரில் மதராக் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.