கடல் சார் வர்த்தகம் அதிகரிக்கும் என்ற அமித் ஷாவின் கிரேட் நிகோபர் திட்ட கருத்து ஆதாரமற்றது: காங் கண்டனம்
புதுடெல்லி: கிரேட் நிகோபர் தீவு மேம்பாட்டுத்திட்டம் கடல்சார் வர்த்தகத்தை அதிகரிக்கும் என்ற உள்துறை அமைச்சரின் கருத்துக்கு காங்கிரஸ் கட்டணம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில், உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியாவின் கடல்சார் வர்த்தகத்தை அதிகரிக்கும் என்று கூறி கிரேட் நிகோபார் மெகா உள்கட்டமைப்பு திட்டம் குறித்த விவாதத்தில் ஆச்சரியப்படத்தக்க வகையில் ஈடுபட்டுள்ளார். இந்த திட்டம் கடல்சார் வர்த்தகத்தை அதிகரிக்கும் என்று அமைச்சரின் வாதமானது ஆதாரமற்றது.
இந்த விஷயத்தில் பல நிபுணர்கள் அடையாளம் கண்டுள்ளபடி இது ஒரு போலியான வாதம். உள்துறை அமைச்சர் திட்டத்தின் பேரரழிவு தரும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்கங்களை முற்றிலும் புறக்கணிக்கிறார். இப்போது 70 அறிஞர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வனத்துறையினர், சிவில் சமூக ஆர்வலர்கள், முன்னாள் அரசு ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சுற்றுச்சூழல்,வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சருக்கு கடிதம் எழுதி திட்டத்தின் கடுமையான மற்றும் மீளமுடியாத எதிர்மறை தாக்கங்கள் குறித்து தங்களது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.இந்த கவலைகளை அமைச்சரும், அரசும் ஒப்புக்கொள்வார்கள் என்று நம்புகிறோம் \\” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
 
 
   