மெரினா கடற்கரையை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: சென்னை மாநகராட்சி வேண்டுகோள்
சென்னை: மெரினா கடற்கரையை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி மற்றும் மெரினா கடற்கரையை நீலக்கொடி கடற்கரைகளாக மேம்படுத்தும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. நீச்சல் குளம் அருகே உள்ள மெரினா கடற்கரையை நீலக்கொடி கடற்கரையாக மாற்றும் பணி ஏறக்குறைய முடிவடைந்துள்ளது. புதிய வசதிகள் இந்த மாத இறுதிக்குள் திறந்து வைக்கப்படும். இந்த முயற்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் மெரினா கடற்கரையை தூய்மையாக வைத்திருக்க சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. அதில் எடுக்கப்பட்டுள்ள கடற்கரையில் நடவடிக்கைகள் பின்வருமாறு,
*மெரினா கடற்கரையை சுத்தமாக வைத்திருக்கும் பணியில் இன்று முதல் 100 தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
*உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 2.4 கிமீ தூரத்திற்கு, காலை 6 மணி முதல் 2 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை தூய்மை பணியில் ஈடுபடவுள்ளனர்.
*காலை 70 பணியாளர்களும், மாலை 30 பணியாளர்களும் தொடர்ந்து பணியில் இருப்பார்கள்.
*மேலும் கடற்கரை மணல் பரப்பை தூய்மை படுத்தும் டிராக்டர்களும் தொடர்ந்து தூய்மை பணியில் ஈடுபடும்.
*மெரினா கடற்கரை தூய்மை பணியை சென்னை மாநகராட்சி தனியாருக்கு ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.