இம்பால்: மணிப்பூரில் ஆரம்ப சுகாதார நிலையத்தை மர்மநபர்கள் தீ வைத்து எரித்தனர். மணிப்பூரில் கடந்த ஆண்டு முதல் குக்கி பழங்குடியினர்- மெய்டீஸ் மக்களுக்கு இடையே மோதல் நடந்து வருகிறது. இதில்,220க்கும் மேற்பட்டோர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் குறிப்பிட்ட வகுப்பை சேர்ந்த முதியவர் கொல்லப்பட்டதால் மீண்டும் வன்முறை வெடித்தது. தீவிரவாதிகள் தாக்கியதில் ஒரு சிஆர்பிஎப் வீரரும் பலியானார். இந்த நிலையில் ஜிரிபாம் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்துக்கு மர்ம நபர்கள் நேற்று தீ வைத்தனர். இதில் கட்டிடம் பலத்த சேதமடைந்தது.
Advertisement