சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை:
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இன்னும் ஆறு மாதங்களுக்கு குடியரசு தலைவர் ஆட்சி ஒன்றிய அரசால் நீட்டிக்கப்படுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2023 மே மாதம் நடந்த கலவரத்திற்குப் பின்பாக அம்மாநிலத்தில் இன்னும் அமைதி நிலவாமல் இருப்பது ஒன்றிய பாஜ அரசின் கையாலாகாத தனத்தை மெய்ப்பிக்கிறது.உலக நாடுகளுக்கெல்லாம் சுற்றுப்பயணம் செல்லும் பிரதமர் உள்நாட்டில் இருக்கும் ஒரு மாநிலத்திற்கு செல்லாமல் இருப்பது அபத்தமானது. 2 ஆண்டுகளாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு ஆளும் பாஜ அரசால் தீர்வு காண முடியவில்லை. மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி நீட்டிக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது.