Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மணிப்பூரில் நடந்த சம்பவம், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் வன்கொடுமை ஆகியவை பாஜக ஆட்சியின் தீய சக்தி: காங். சுப்ரியா ஷ்ரினேட் சாடல்!!

டெல்லி: சக்தி என்ற வார்த்தையை ராகுல் காந்தி பயன்படுத்திய விதத்திற்கு பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அதற்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். இந்திய ஒற்றுமை நீதிக்கான பயணத்தின் நிறைவு கூட்டத்தில் சக்தி என்ற வார்த்தையை ராகுல் காந்தி பயன்படுத்திய விதத்தை பாஜக சர்ச்சையாகி வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய ராகுல்; இந்து மதத்தில் சக்தி என்ற வார்த்தை உண்டு என்றும், ஆனால் தாங்கள் எதிர்க்கும் சக்தியானது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையத்தை ஒரு சக்தி பின்னால் இருந்து நடத்துகிறது என்றார்.

சக்தியாக பார்க்கப்படும் பெண்களையும், இந்து மதத்தின் மரியாதைக்குரிய கருத்தாக்கத்தையும் ராகுல் அவமதித்து விட்டார் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடக, தெலுங்கானாவில் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்று பேசிய மோடி; சக்தியை வணங்குகின்ற ஒரு பிரிவுக்கும், சக்தியை அழிக்க விரும்பும் ஒரு பிரிவுக்கும் இடையே மக்களவை தேர்தல் மோதல் நடக்கிறது என்றார்.

தன்னுடைய பேச்சை பிரதமர் மோடி திரித்துப் பேசுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ள ராகுல் காந்தி, தாம் பேசியது நீதியற்ற, ஊழல் கொண்ட மற்றும் பொய்யான சக்திகளுக்கு எதிராகவே என்றும் விளக்கம் அளித்துள்ளார். இதற்கிடையே பாஜகவை கடுமையாக சாடியுள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட்; மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டது. மல்யுத்த வீராங்கனைகளுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை ஆகியவை பாஜக ஆட்சியில் நடைபெற்ற தீய சக்தி செயல்பாடுகள் என்று சாடியுள்ளார்.