லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் லக்னோ விமான நிலையத்தில் ஹஜ் பயணிகள் வந்த விமானம் தரையிறங்கியபோது இடதுபுற சக்கரத்தில் புகை எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து ஹஜ் பயணிகள் வந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். விமானத்தில் பயணித்த 250 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். லேண்டிங் கியரின் ஹைட்ராலிக் ஆயில் கசிந்ததால் புகை எழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
+
Advertisement


