மும்பை: மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சியமைக்க தேவேந்திர பட்னாவிஸ் உரிமை கோரினார். இன்று காலை பா.ஜ.க.வின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கட்சியின் சட்டமன்ற குழுத்தலைவராக பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டார். நாளை மாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சராக பட்னாவிஸ் பதவியேற்க உள்ளார். சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாரும் பட்னாவிசுடன் ஆளுநரை சந்தித்தனர்.
Advertisement


