Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மராட்டிய மாநிலத்தில் 26.34 லட்சம் பேருக்கு மாதாந்திர மகளிர் உதவித்தொகை நிறுத்திவைப்பு

மும்பை: மராட்டிய மாநிலத்தில் 26.34 லட்சம் பேருக்கு மாதாந்திர மகளிர் உதவித்தொகை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 26.34 லட்சம் பேரின் தகுதி குறித்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளதால் உதவித்தொகை நிறுத்தப்பட்டுவதாக மராட்டிய அரசு அறிவித்துள்ளது. லடுகி பகின் என்ற திட்டத்தின் கீழ் 2.5 கோடி பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். மகா​ராஷ்டி​ரா​வில் கடந்த ஆண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்​றது. தேர்​தல் நடை​பெறு​வதற்கு சில மாதங்களுக்கு முன்​பு, மகளிர் உரிமைத் தொகை திட்​டம் அறி​முகம் செய்​யப்​பட்​டது.

இதன்​படி 21 முதல் 65வயதுக்​குட்​பட்ட, ஆண்டு வரு​மானம் ரூ.2.5 லட்​சத்​துக்​குட்​பட்ட பெண்​களுக்கு மாதந்​தோறும் ரூ.1,500 நிதியுதவி வழங்​கப்​படு​கிறது. இந்​நிலை​யில், இந்த திட்​டம் குறித்து பெண்​கள் மற்​றும் குழந்​தைகள் மேம்​பாட்டு துறை சார்​பில் தணிக்கை செய்​யப்​பட்​டது. இதில், 14,298 ஆண்​களுக்கு இந்த திட்​டத்​தின் கீழ் ரூ.21.44 கோடி வழங்​கப்​பட்​டிருப்​பது தெரிய​வந்​துள்​ளது. இந்த திட்​டத்​துக்கு இணைய வழி​யில் விண்​ணப்​பம் பெறப்​பட்​டது. அப்​போது, ஆண்​கள், பெண்​களின் பெயரில் விண்​ணப்​பம் செய்து இத்​தகைய முறை​கேட்​டில் ஈடு​பட்​டிருப்​பது அம்​பல​மாகி உள்​ளது.

இதுகுறித்து துணை முதல்​வர் அஜித் பவார் கூறும்​போது;

மகளிர் உரிமைத் தொகை திட்​டம் ஏழை பெண்​களின் நலனுக்​காக அறி​முகம் செய்​யப்​பட்​டது. இதில் ஆண்​கள் பயன்​பெறு​வதை ஏற்க முடி​யாது. அவ்​வாறு உதவித் தொகையை பெற்​றவர்​களிட​மிருந்து அந்த பணம் திரும்ப வசூலிக்​கப்​படும். இதற்கு அவர்​கள் ஒத்​துழைக்​கா​விட்​டால் கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என தெரிவித்தார்.

மேலும் தகு​தி​யில்​லாத 26.34 லட்​சம் பெண்​கள் இந்த திட்​டத்​தில் பயனடைந்து வந்​தது தெரிய​வந்​தது. இதையடுத்​து, அவர்களுக்கான நிதி​யுதவி நிறுத்​தப்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. குறிப்​பாக, ஒரு குடும்​பத்​தைச் சேர்ந்த 2 பெண்களுக்கு மட்டுமே இந்த தொகை வழங்​கப்​படும் என அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. ஆனால் 7.97 லட்​சம் பெண்​கள் 3-வ​தாக பதிவு செய்து பயனடைந்து வரு​வது தெரிய​வந்​துள்​ளது. இதனால் அரசுக்கு ரூ.1,196 கோடி இழப்பு ஏற்​பட்​டுள்​ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது​போல, விதி​களை மீறி உச்​சவரம்​பான 65 வயதுக்கு மேற்​பட்ட 2.87 லட்​சம் பெண்​கள் நிதி​யுதவி பெற்று வரு​கின்​றனர். இதனால் ரூ.431.7 கோடி கூடு​தல் செலவு ஏற்​பட்​டுள்​ளது. மேலும் 4 சக்கர வாக​னம் வைத்​திருக்​கும் குடும்​பத்​தைச் சேர்ந்த 1.62 லட்​சம் பெண்​கள் நிதி​யுதவி பெற்று வரு​வது தெரிய​வந்​துள்​ளது. இத்​திட்​டத்​தில் பல்​வேறு முறை​கேடு​கள் இருப்​ப​தால் முறை​யாக வி​சா​ரணை நடத்த வேண்​டும்​ என்​ற கோரிக்​கை எழுந்​துள்​ளது.