Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கும்மிடிப்பூண்டி அருகே தேவம்பட்டு கிராமத்தில் சிவன் கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம்.

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த தேவம்பேடு ஊராட்சியில் ஸ்ரீ மங்களாம்பிகை சமேத - ஸ்ரீ சோமேஸ்வர திருக்கோயில் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த 22 தேதி பந்தக்கால் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் லக்ஷ்மி ஹோமம், கிராம தேவதா பூஜை கோபூஜை அஷ்டபந்தனம் சாற்றுதல் பூஜை நடந்தது.

பின்னர் ஸ ஸ்ரீ மங்களாம்பிகை சமேத - ஸ்ரீ சோமேஸ்வர சிவனுக்கு வாஸ்துசாந்தி, பிரவேச பலி, ம்ருத்ஸங்கிரஹணம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கலாகர்ஷனம் கும்பலங்காரம், யாகசாலை பிரவேசம், வேதிகார்ச்சனை, மஹா சங்கல்பம், முதற்கால யாக சாலை பூஜை, பூர்ணாஹுதி, மஹா தீபாராதனை, பிரசாத விநியோகம் விசேஷ சந்தி, சகல பரிவார தேவதா ஆவாஹனம், சோம பூஜை, பாலிகா பூஜை, துவார பூஜை

மஹா பூர்ணாஹுதி, சதுர்வேத பாராயணம், ராக தாள உபச்சாரம், திராவிட வேதம், மஹா தீபாராதனை, பிரசாத விநியோகம் மற்றும் நாடி சந்தானம் நடைபெறும். ஸ்பர்ஸா ஹுதி, இரண்டாம் கால யாக சாலை பூஜை, விசேஷ பூஜை, விசேஷ ஹோமம், சகல சூக்த ஹோமம் மூல மந்தர ஜப ஹோமம், திரவ்யாஹுதி வேதிகார்ச்சனை, ருத்ர பாராயண ஹோமம் மாஹபூர்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது

தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் யாகசாலையில் புனித நீர் எடுத்து வந்து கோயிலை வலம் வந்து ராஜகோபுரம் மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

பிற்பகல் 1000ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார். இதில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகர், அதிமுக முன்னாள் எம்எல்ஏ பலராமன் உள்ளிட்ட 500 மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கும்பாபிஷேக விழாவில் தேவம்பட்டு கிராம பெரியவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், இளைஞர்கள் முன்னின்று சிறப்பாக நடத்தினார்.