மதுரை: மதுரை மாநகராட்சியில் சொத்து வரியில் ரூ.150 கோடி முறைகேடு புகாரில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், 5 மண்டல தலைவர்களுடன், நகரமைப்பு குழு தலைவர் மூவேந்திரன், வரிவிதிப்புக் குழு தலைவர் விஜயலட்சுமி என 7 பேர் ராஜினாமா செய்தனர். இந்நிலையில், மதுரை மேயர் இந்திராணியின் நேர்முக பெண் உதவியாளராக இருந்த பொன்மணி மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக புதிய நேர்முக உதவியாளராக கூடுதல் பொறுப்பாக கவுன்சில் செயலர் சித்ரா நியமிக்கப்பட்டுள்ளார். பொன்மணியின் கணவர் ரவி. மாநகராட்சியின் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து, சமீபத்தில் ராமேஸ்வரத்திற்கு மாறுதலாகிச் சென்றுள்ள நிலையில், தற்போது எழுந்துள்ள வரி வசூல் முறைகேடு வழக்கு விசாரணை தொடர்பாக ரவியிடமும் விசாரணை மேற்கொள்ளலாம் எனத்தெரிகிறது. வரி வசூல் பணியில் பில் கலெக்டர்களுடன் தொடர்புடைய ஒப்பந்த ஊழியர்கள், இடைத்தரகர்கள் மற்றும் அதிகாரிகளின் பட்டியலை மத்திய குற்றப்பிரிவினர் பெற்றுள்ளனர்.
Advertisement