அவனியாபுரம்: இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மதுரைக்கு நேற்று முன்தினம் காலை 9.15 மணிக்கு தனியார் விமானம் வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனை மேற்கொண்டனர். அப்போது இரு பயணிகளிடம் 8 கிலோ உயர்ரக கஞ்சா இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். தலா 4 கிலோ பார்சல்களாக கஞ்சாவை கொண்டு வந்த தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சக்கராபள்ளியை சேர்ந்த முகம்மது மைதீன் (26) மற்றும் சென்னையைச் சேர்ந்த சாகுல் ஹமீது (50) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்கள் இருவரும் கடத்தியது கஞ்சா வகைகளிலேயே அதிக போதையை தரக்கூடிய உயர்ரகத்தைச் சேர்ந்த ஹைட்ரோபோனிக் கஞ்சா என்பதும், இதன் மதிப்பு தற்போதைய சந்தை நிலவரப்படி ரூ.8 கோடி வரை இருக்கும் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரத்தில் இருந்து ெகாடுக்கப்பட்ட கஞ்சா பார்சலை இலங்கை நாட்டின் கொழும்பு வழியாக வந்து மதுரைக்கு கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது.
+
Advertisement


