மதுரை மேலமடை மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: மதுரை மேலமடை மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மதுரை மேலமடை பகுதியில் ரூ.150 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தீறந்துவைக்கவுள்ளார்.
இது தொடர்பாக முதல்வரின் சமூக வலைதள பதிவில்:
வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்: மதுரை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது. மதுரை - சிவகங்கை மாவட்டங்களை இணைக்கும் மேலமடை சந்திப்பு சாலை மேம்பாலத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, நாளை நான் திறந்து வைக்கிறேன்.
இந்த முக்கிய மேம்பாலத்துக்கு, இம்மண்ணின் மக்களை ஒன்றுதிரட்டி ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் பெயரைச் சூட்டிப் பெருமையடைகிறோம். சீற்றமிகு சிவகங்கை அரசியின் புகழை இந்த மேம்பாலம் ஒவ்வொரு நாளும் நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.


