மதுரை: மதுரையில் ரூ.12 கோடி மதிப்புள்ள இடத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்து அபகரிக்க முயற்சி என வழக்கு தொடரப்பட்டது. புதூரைச் சேர்ந்த தர்மராஜா என்பவர் மீது மதுரையைச் சேர்ந்த லாவண்யா என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வியாபாரம் விரிவுபடுத்த வாங்கிய ரூ.1 கோடி கடனுக்கு ரூ.12 கோடி இடத்தை போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்ய முயற்சி செய்வதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், மனுதாரர் புகார் குறித்து உள்துறை செயலர், டிஜிபி, தென்மண்டல காவல்துறை தலைவர் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டது.
Advertisement