சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின், தமிழ்நாடு சட்டம் திருத்தப்பட்டவாறான பிரிவின்படி மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மன்றங்களில் உறுப்பினராக நியமனம் செய்யப்படுவதற்கு கடந்த 1ம் தேதி முதல் நேற்று வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
இதனிடையே, மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்தும் அவர்கள் தொடர்புடைய பொது நல சங்கங்களிடமிருந்தும் விண்ணப்பம் செய்ய நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாளை (17ம் தேதி) நீட்டித்து வழங்கும்படி வரப்பெற்ற கோரிக்கைகளை பரிசீலித்து வரும் 31ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் வசித்து வரும் தகுதியான மாற்றுத்திறனாளிகள், ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கைகளின்படி தொடர்புடைய பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆணையரிடம் வரும் 31ம் தேதி மாலை 3 மணி வரை விண்ணப்பம் செய்யலாம்.