சென்னை: தமிழகத்தின் எட்டு இடங்களில் நம் மாநில வாழ்வாதாரங்களைக் காக்க, ஜனநாயகத்தைப் பாதுகாக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரசார கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆக.9ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் வெளியேற்றம் என்ற தலைப்பில் கூட்டம், ஆக.10ம் தேதி கடையநல்லூரில் மதச்சார்பின்மையும் கூட்டாட்சியும் தலைப்பில் கூட்டம், ஆக.11ம் தேதி கம்பத்தில் முல்லைப் பெரியாறும்; நியூட்ரினோவும் தலைப்பில் கூட்டம் நடைபெறுகிறது. இதேபோல ஆக.12,13. 14. 18, 19ம் தேதிகளில் பல்வேறு தலைப்புகளில் கூட்டம் நடைபெறுகிறது என மதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.
Advertisement