Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மழை குறைந்ததால் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு சேவை தொடக்கம்: கன்னியாகுமரி செல்லும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வந்த கனமழை குறைந்ததால் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு சேவை வழக்கம் போல் தொடங்கியது. கன்னியாகுமரியில் அண்மைய காலமாக மழை பெய்து வந்ததுடன் ராட்சத அலைகள் எழுந்து கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு படப்பிக்கு சேவை ரத்து செய்யப்பட்டு இருந்தது.

தற்போது மழை குறைந்து கடல் இயல்புடன் காணப்பட்டதால் படகு சேவை மீண்டும் தொடங்கியது. இதனால் உற்சாகமடைந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதே போல் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்திலும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து உர்சாகம் அடைந்தனர். துடுப்பு படகுகள் மோட்டார் படகுகள் மூலம் சவாரி செய்து அலையாத்தி காடுகளின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.