Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் சித்த மருத்துவ பல்கலை மசோதா தாக்கல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறை சார்பில் 11வது சர்வதேச யோகா தினம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ‘சித்த பல்கலைக்கழகம் அமைப்பதற்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் இருந்தார்;

பிறகு சட்டமன்றத்தில் அந்த மசோதா திரும்ப பெற்றுக் பெறப்பட்டது. தற்பொழுது சட்டபூர்வமான கிளரிஃபிகேஷன் நிறைவடைந்து எதிர்வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்து வரக்கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரில் சித்த பல்கலைக்கழக மசோதா சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றியதற்கு பிறகு சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் பெற்று நிச்சயம் தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் வந்தே தீரும். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது, போதைப் பொருள் எங்கு கிடைத்தது என்று சொல்லுங்கள் உடனடியாக நான் நடவடிக்கை எடுக்கிறேன் என்று சொல்லி இருக்க வேண்டும்;

மாறாக சபாநாயகரை கொண்டு 21 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியை பறிக்க நடவடிக்கைகளை எடுத்தார். அந்த யோக்கிய சிகாமணி இதைப்பற்றி சொல்வதற்கு வேடிக்கையான ஒன்று, போதை குக்கா வழக்குகள் சிபிஐ இடம் உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தான் தமிழ்நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதை வஸ்துகளுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து ஆண்டு தோறும் கின்னஸ் சாதனை படைத்து வருகிறோம். கடந்த ஆண்டுகளில் பெருகியிருந்த போதை நடமாட்டம் தற்பொழுது மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி இன்றைக்கு கஞ்சா பூஜ்யம் சதவிகித சாகுபடி என்ற நிலையை இந்த அரசு உருவாக்கி இருக்கிறது என்பதை எடப்பாடி பழனிசாமி நன்கு உணர வேண்டும்’ என்றார்.