சென்னை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எல்லோரிடமும் இறை உணர்வும் தியாகச் சிந்தனையும் சகோதரத்துவமும் மலரட்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் பக்ரீத் பண்டிகை வாழ்த்துகள் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இஸ்லாமியப் பெருமக்களின் வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் மலரட்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Advertisement