Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பாகிஸ்தானின் அணு ஆயுத ஆண்டு விழாவில் மோடிக்கு பகிரங்க மிரட்டல் விடுக்கும் லஷ்கர் தலைவன்: வீடியோ வெளியிட்ட வங்கதேச மாஜி பிரதமரின் மகன்

புதுடெல்லி: பாகிஸ்தானின் அணு ஆயுத ஆண்டு விழாவில் பிரதமர் மோடிக்கு பகிரங்க மிரட்டல் விடுக்கும் லஷ்கர் தலைவனின் வீடியோவை வங்கதேச மாஜி பிரதமரின் மகன் வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்டில் வங்கதேசத்தில் நடந்த வன்முறை போராட்டங்களால் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான 15 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது. ேபாராட்ட கும்பல் அவரது அரண்மனையை முற்றுகையிட்டதால், உயிருக்கு பயந்து அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தார். அவரது அவாமி லீக் கட்சி வங்கதேசத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது, 84 வயதான நோபல் அமைதி பரிசு பெற்ற முகமது யூனுஸ், வங்கதேசத்தில் ெபாது தேர்தல் நடைபெறும் வரை இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஜித் ஜோய் வெளியிட்ட பதிவில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி முசம்மில் ஹாஷ்மி இந்தியாவை மிரட்டுவதாகவும், கடந்த ஆண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட அரசியல் கலவரத்தில் தங்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறும் வீடியோவை பகிர்ந்துள்ளார். மேலும் அவரது பதிவில், ‘காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானிய பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் தலைவன், என் தாயாரான வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டத்தை நடத்தியதாக தனது உரையில் கூறுகிறார்’ என்று கூறியுள்ளார். அந்த வீடியோவின்படி, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் அரசியல் முகமாகக் கருதப்படும் பாக். மர்காஸி முஸ்லிம் லீக் அமைப்பால் பாகிஸ்தானில் கடந்த 28ம் தேதி நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் பாகிஸ்தானின் அணு ஆயுத ஆண்டு விழாவைக் கொண்டாடுவதற்காக இந்த நிகழ்வு குஜ்ரான்வாலாவில் நடைபெற்றது. சமூக ஊடகங்களில் வைரலாக பரவிய இந்த வீடியோவில், பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஹாஷ்மி, இந்தியாவை எதிரி என்று குறிப்பிட்டு, பிரதமர் மோடிக்கு நேரடியாக மிரட்டல் விடுக்கிறார். நிகழ்வில் பேசிய ஹாஷ்மி, ‘நீங்கள் தோட்டாக்களால் எங்களை பயமுறுத்த முயல்கின்றீர்கள்; மோடி அவர்களே உங்களுக்கு ஒரு செய்தியை அனுப்புகிறோம்; உங்களுடைய ஏவுகணைகளுக்கு எங்களது குழந்தைகள் கூட பயப்படவில்லை. உங்களது தோட்டாக்களுக்கு நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்? உங்களால் எங்களை பயமுறுத்த முடியாது.

உங்களுடைய முன்னோர்களாலும் அது முடியவில்லை. இந்தியாவின் வரலாற்றைப் பாருங்கள்; உங்களது முன்னோர்களின் வரலாற்றைப் பாருங்கள்; உங்களது முன்னோர்கள் எப்போதும் எங்களுக்கு முன் மண்டியிடுவார்கள்; நீயும் அப்படித்தான் செய்வாய்’ என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார். கடந்த ஆண்டு ஷேக் ஹசீனாவை பதவியிலிருந்து அகற்றிய அரசியல் கலவரத்திற்கு மறைமுகமாக பொறுப்பேற்ற ஹாஷ்மி, ‘மோடி அவர்களே, கடந்த ஆண்டு வங்கதேசத்தில் உன்னை தோற்கடித்தோம் என்பது உனக்குத் தெரியும்’ என்று கூறினார்.