போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரியில் இருந்து அரசம்பட்டிக்கு அரசு டவுன் பஸ் நேற்று காலை புறப்பட்டது. காவேரிப்பட்டணம் வந்ததும், அங்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு நெடுங்கல் நோக்கி சென்றது. பஸ்சில் 20க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். நெடுங்கல் ஏரிக்கரை அருகே சென்றபோது, திடீரென ஆக்சில் கட் ஆகி பஸ் தறிகெட்டு ஓடி ஏரிக்குள் பாய்ந்தது. பனை மரத்தின் பக்கவாட்டில் உரசியவாறு பஸ் கவிழ்ந்தது. அப்பகுதியினர் வந்து அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.
Advertisement