*காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார்
கீழ்வேளூர் : குருக்கத்தில் பள்ளிக்கு ரூ.5.40 கோடியில் புதிய வகுப்பறை கட்டிடம். கணொலிகாட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த குருக்கத்தி அரசு மேல் நிலைப்பள்ளியில் ரூ.5.40 கோடி மதிப்பீட்டில் 18 வகுப்பறைகள் மற்றும் 2அறிவியல் ஆய்வகங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த பள்ளி கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து குருக்கத்தி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் நாகைமாலி, கீழ்வேளூர் வட்டார ஆத்மா குழு தலைவரும், கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளருமான கோவிந்தராசன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.
நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் சுகாஷினி, மாவட்டக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், ஆசிரியர் பயிற்சி நிலைய முதல்வர் அன்புமுத்து, தலைமை ஆசிரியர்கள் குருக்கத்தி பாலசுப்பரமணியன், கீழ்வேளூர் ஞானசேரகன், திமுக மாவட்ட சார்பு அணி துணை அமைப்பாளர்கள் ஜவகர்பாட்ஷா, சாய்பாட்ஷா, மாவட்ட பிரதிநிதிகள் நடராஜன், வீரமணி, ஒன்றிய துணைச் செயலாளர் வெண்ணிலாபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.