Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சித்தூர் போலீஸ் பயிற்சி மைதானத்தில் ஊர்க்காவல் படை பிரிவுகளை கர்னூல் ரேஞ்ச் கமாண்டன்ட் ஆய்வு

சித்தூர் : கர்னூல் ரேஞ்ச் ஊர்காவல் படை கமாண்டன்ட் மகேஷ் குமார் நேற்று சித்தூர் போலீஸ் பயிற்சி மைதானத்திற்கு வருகை தந்தார். பின்னர் ஊர்காவல் படை பிரிவுகளை ஆய்வு செய்து ஊர்க்காவல் படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து ஊர்க்காவல் படை வீரர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: அனைவரும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பதன் நன்மைகள் மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாததால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சித்தூர் மாவட்டத்தில் 362 ஊர்காவல் படையினர் சட்டம் ஒழுங்குக்காக கடமைகளைச் செய்து வருகின்றனர்.

இவர்களுடன், 137 ஊர்க்காவல் படையினர் பல்வேறு துறைகளில் பணி நியமன அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். போக்குவரத்து ஒழுங்குமுறை, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு மற்றும் குற்றங்களைத் தடுப்பதில் ஊர்க்காவல் படையினர் காவல்துறையின் முதுகெலும்பாக உள்ளனர். காவல்துறைக்கு இணையாக, மாநிலத்தில் இயற்கை பேரிடர்கள், பண்டிகைகள், விஐபி மற்றும் விவிஐபி ஆகியவற்றின் போது ஊர்க்காவல் படையினர் காவல்துறைக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளனர்.

அரசியல் கட்சி தலைவர்கள் வருகைகளின் போது அவர்களின் சேவைகள் காவல்துறைக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. மேலும் ஊர்க்காவல் படையினர் தங்கள் சேவைகளை நேர்மையுடன் செய்து, சித்தூர் மாவட்ட காவல் துறைக்கு நல்ல பெயரைக் கொண்டுவரவேண்டும் என்றார்.

முன்னதாக ஊர்க்காவல் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டு தர்பார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் ஏ.ஆர். டி.எஸ்.பி சின்னி கிருஷ்ணா, திருப்பதி ஊர்க்காவல் படை டிஎஸ்பி சிரஞ்சீவிஆர்.ஐ ஊர்க்காவல் படையினர் சந்திரசேகர், ஆர்.எஸ்.ஐ.க்கள் மற்றும் ஊர் காவல் படையினர் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர்.