பயிற்சிகள்:
1. டிரேடு அப்ரன்டிஸ்: 122 இடங்கள்.
2. டிப்ளமோ அப்ரன்டிஸ்: 94 இடங்கள்.
3. கிராஜூவேட் அப்ரன்டிஸ்: 75 இடங்கள்.
4. கிராஜூவேட் அப்ரன்டிஸ்: (இன்ஜினியரிங் அல்லாதது): 46 இடங்கள்.
பாட வாரியாக ஏற்பட்டுள்ள காலியிடங்கள் விவரம்:
i) டிரேடு அப்ரன்டிஸ்: பிட்டர்- 24, எலக்ட்ரீசியன்- 35, எலக்ட்ரானிக்கல் மெக்கானிக்-15, வெல்டர்-4, இன்ஸ்ரூமென்ட் மெக்கானிக்-17, கோபா-5, மிஷினிஸ்ட்-4, பம்ப் ஆபரேட்டர் மற்றும் மெக்கானிக்-7, ஏசி மெக்கானிக்-11.
ii) டிப்ளமோ அப்ரன்டிஸ்: கெமிக்கல்-5, சிவில்-8, மெக்கானிக்கல்-42, எலக்ட்ரானிக்ஸ்- 15, எலக்ட்ரிக்கல்-24.
iii) கிராஜூவேட் அப்ரன்டிஸ்: கெமிக்கல்-3, சிவில்-8, மெக்கானிக்கல்-28, எலக்ட்ரிக்கல்-16, எலக்ட்ரானிக்ஸ்- 9, இன்ஸ்ட்ருமென்டேசன்-11, பிஎஸ்சி (இயற்பியல்/வேதியியல்)-26, பிஏ/பிஎஸ்சி/பி.காம்- 20.
உதவித் தொகை: ஒரு வருட ஐடிஐ படிப்பை முடித்தவர்களுக்கு ரூ.7,700, 2 வருட ஐடிஐ படிப்பை முடித்தவர்களுக்கு ரூ.8050 வழங்கப்படும். டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.8,000, பிஇ/பிஎஸ்சி/இதர பட்டதாரிகளுக்கு ரூ.9,000 உதவித் தொகை வழங்கப்படும்.
வயது வரம்பு: 21.07.2025 தேதியின்படி டிரேடு அப்ரன்டிஸ் பயிற்சிக்கு 18 முதல் 24 வயதிற்குள்ளும், டிப்ளமோ அப்ரன்டிஸ் பயிற்சிக்கு 18 முதல் 25 வயதிற்குள்ளும், கிராஜூவேட் அப்ரன்டிஸ் பயிற்சிக்கு 18 முதல் 26 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திzனாளிகளுக்கு தலா 10 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: டிரேடு அப்ரன்டிசுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோ அப்ரன்டிசுக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். கிராஜூவேட் அப்ரன்டிசுக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும். இன்ஜினியரிங் அல்லாத கிராஜூவேட் அப்ரன்டிசுக்கு இயற்பியல்/வேதியியல் பாடப்பிரிவில் பிஎஸ்சி பட்டம் அல்லது ஏதாவதொரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஏற்கனவே அப்ரன்டிஸ் பயிற்சி பெற்றவர்கள், கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.விண்ணப்பதாரர்கள் ஐடிஐ/டிப்ளமோ/ பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத் தேர்வு நடத்தப்படும். பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு கூடங்குளத்தில் உள்ள அணுமின்நிலையத்தில் ஒரு வருட பயிற்சி வழங்கப்படும்.
ஐடிஐ படித்தவர்கள் www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்திலும், டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் www. nat.education.gov.in என்ற இணையதளத்திலும் தங்களது கல்வித் தகுதியை முன்பதிவு செய்து விட்டு www.npcil.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, விவரங்களை பூர்த்தி செய்து, தேவையான சான்றுகளின் நகல்களை இணைத்து தபாலில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
தி சீனியர் மேனேஜர் (மனித வளத்துறை),
கூடங்குளம் அணுமின்நிலையம்,
கூடங்குளம் அஞ்சல், ராதாபுரம்,
நெல்லை மாவட்டம்.
பின்கோடு- 627 106.
விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்:21.07.2025.