கோவை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரி்த்து வருகின்றனர். இந்த நிலையில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஏற்கனவே கைதான உதயகுமார் மற்றும் தீபு ஆகியோருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. நேற்று அவர்கள் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை, குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் உள்ள தொடர்பு, அரசியல் கட்சியினர் தலையீடு, பங்களாவில் இருந்த பொருட்கள், ஆவணங்கள் குறித்த விவரங்களை போலீசார் கேட்டனர். இந்த வழக்கில் ஜம்சீர் அலி, ஜித்தின் ஜாய் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. இவர்கள் வரும் 30ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
Advertisement