Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கொடைக்கானல் மலைச்சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச்சாலையில் ராட்சத மரம் விழுந்து இன்று அதிகாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இலங்கையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ள ‘‘டிட்வா’’ புயல் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று முதல் பயங்கர சூறைக்காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச்சாலையில் குருசடி அருகே, இன்று அதிகாலை சாலையோரம் இருந்த ராட்சத மரம் ஒன்று திடீரென முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது.

இதனால், மலைச்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் இயந்திரம் மூலம் மரத்தை அறுத்து அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். கொடைக்கானல்-வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் ஓரங்களில் உள்ள பட்டுப்போன ஆபத்தான மரங்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.