திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி காக்கநாடு பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக திருக்காக்கரை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அந்த அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் ஒரு குடியிருப்பில் தங்கி இருந்த பிரபல யூடியூபர் ரின்சி, அவரது காதலன் யாசர் அராபத் 2 பேரிடம் இருந்து 23 கிராம் எம்டிஎம்ஏ கைப்பற்றப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.
Advertisement