மதுரை: மதுரையில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களை சந்தித்தார். அவரிடம் நிருபர்கள், ‘தேர்தல் நெருங்கி வருகிறதே டிடிவி.தினகரன், ஓபிஎஸ்சை அதிமுகவில் சேர்ப்பீர்களா?’ என்றதும், ‘‘இதுக்கு நான் பதில் சொல்ல முடியாது, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் பதில் சொல்லணும்’’ என்றார்.
‘பொதுக்குழுவில் விஜய்யை அதிமுகவோ, புதுச்சேரியில் அதிமுகவை விஜய்யோ ஏதும் விமர்சிக்கவில்லையே. கூட்டணி வைக்கத் திட்டமா?’ என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, ‘‘இதை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுச் சொல்லட்டுமா? இதெல்லாம் நமக்கு தெரியாது. தம்பி புதுசா ஒண்ணு சொல்றாரு. இதுக்கெல்லாம் பதில் பொதுச்செயலாளர்தான் சொல்லணும்’’ என்றார்.


